அருண்ராஜா காமராஜ் பாடலாசிரியராகவும், படங்களில் துணை நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். மகளிர் கிரிக்கெட்டைப் பற்றிய படமான 'கனா' படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அருண்ராஜா காமராஜின் கிரிக்கெட் மீதான ஆர்வம் படத்தில் பிரதிபலித்து, ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அருண்ராஜா காமராஜும் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் நன்றாக விளையாடுவார்.
பிரபல இயக்குனர் கே பாக்யராஜின் மகன் என்பதால், சாந்தானு 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்குள் நுழைந்தார். சாந்தானு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சாந்தானு ஒரு நல்ல ஆல்ரவுண்டர், விளையாட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனும் கிரிக்கெட் லவ்வர். வார இறுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய தனது சொந்த தயாரிப்பான 'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்தது குறிப்பிடத்தக்கது.
விக்ராந்த் தனது சினிமா வாழ்க்கையை நன்றாகத் தொடங்கி, ரசிகர்களிடையே தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டார். தனது படங்களின் மூலம் மறக்கமுடியாத சில கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் போது தனது கிரிக்கெட் திறமைக்காக மிகவும் பிரபலமானவர். விக்ராந்த் ஒரு ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர், அவர் தனது பேட் மூலம் சில விரைவான ரன்களை எடுக்க முடியும். எதிராளி தனது இன்னிங்ஸை இன்னும் சிறிது நேரம் கொண்டு சென்றால் அது அவர்களுக்குத் தான் ஆபத்து.
விஷ்ணு விஷால் ஸ்கிரிப்ட் தேர்வில் சிறந்த உணர்வைக் கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் தனித்துவமான கதைகளில் நடிக்கிறார். சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார் விஷ்ணு. ஆனால் எலும்பு காயத்தால் அவரது வாழ்க்கை மாறியது. இருப்பிணும் விஷ்ணு விஷால் ஒருபோதும் தனது கிரிக்கெட் ஃபார்மை இழக்கவில்லை. அவர் செலிப்ரிட்டி லீக்கில் கிரிக்கெட் விளையாடும்போது பெரிய பவுண்டரிகளை அடித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook