New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/17/RoEd5IboHiASLBVLAwWq.jpg)
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பனி என்ற படத்தில், ஜேஜூ ஜார்ச் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
2008-ம் ஆண்டு தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான நின்னந்தே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அபிநயா, அடுத்து நாகர்ஜூனாவின் கிங் படத்தில் நடித்திருந்தார்.
2009-ம் ஆண்டு தமிழில் வெளியான நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், ஈசன், வீரம், பூஜை, குற்றம் 23 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழி படங்களில் நடித்துள்ள அபிநயா, கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் அபிநயா, கடந்த மார்ச் மாதம், தனது நீண்டநாள் காதலர் வெகசனா கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
ஏப்ரல் 16-ந் தேதி (நேற்று) இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமண புகைப்படங்களை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.