New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/05/46TGsoHTyWiCSijgfUxM.jpg)
சீரியலில் நடித்து பிரபலமான இந்த நடிகை தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாகவும் இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வாணி போஜன். அதன்பிறகு 2012-ம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார்.
அடுத்து சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் திரும்பிய வாணி போஜன் ஆஹா என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதில் தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆன வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், ராமன் ஆண்டளும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள வாணி போஜன் அடுத்து ஆரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் நடித்த மகான் படத்தில் அவரின் முன்னாள் காதலியாக வாணி போஜன் நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்வசமாக இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
சமீபத்தில் வெளியான சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்த கேங்கர்ஸ் படத்தில், வாணி போஜன், மாதவி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.