New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/26/Ob4eupLj0lhjBYqEfzJi.jpg)
நடிகை வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வைரல் நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அடுத்து, ராஜ்கிரனுக்கு ஜோடியாக மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு, நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
விஜய் டிவியின், பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகளை பெற்றிருந்த வனிதா, சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவி கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.
இதனிடையே தற்போது வனிதா இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு வனிதாவுடன் இணைந்து கதை திரைக்கதை அமைத்திருந்த ராபர்ட் மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது இவர்கள் இருவரும் 2-வது முறையாக இணைந்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் வனிதா இணைந்து நடித்துள்ள இந்த படத்தை வனிதாவே கதை திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், வனிதாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சன கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பட வெளியீட்டை ஜூனில் டெலிவரி என்று அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.