கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ்.. ரம்யாவை கோவிலுக்கு வரவைத்து கோர்த்து விட்ட மாப்பிள்ளை
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா தீபா கையில் இருந்த கல்யாண புடவையை ஆள் வைத்து கொள்ளையடித்த நிலையில் இன்று, தீபாவிடமிருந்து புடவையை கொள்ளையடித்து வந்தவன் ரம்யாவிடம் கொண்டு வந்து கொடுக்க அவள் சந்தோஷப்படுகிறாள். அதே நேரத்தில் தீபா பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க அங்கு வந்த கார்த்திக்கு என்ன ஆச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
கார்த்திக் சரி விடுங்க உங்களுக்கு தான் பச்ச கலர் பிடிக்காது என்று சொன்ன தீபா அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க கார்த்திக் தெரியும் நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கும் போது நீங்க போன் பண்ணுவேன் சும்மா உங்களோடு அப்படி விளையாடினேன் என்று சொல்கிறான். மேலும் ஒரு கவலை கொடுத்து பிரிச்சு பாருங்க என்று சொல்ல அதில் தீபாவுக்கு பிடித்த ப்ளூ கலரில் புடவை இருக்க அதை பார்த்து தீபா சந்தோஷப்படுகிறாள்.
அதன் தொடர்ச்சியாக ரமேஷ் ரம்யாவை கோவிலுக்கு வர வைக்க இங்கு வந்த ரம்யா எதுக்கு என்ன வர சொன்ன என்று சொல்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல அபிராமி என்ட்ரி கொடுக்கிறாள். உடனே ரமேஷ் தீபாவோட கல்யாணம், எங்களோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு ரம்யா பரிகாரம் செய்ய வந்ததாக சொல்லி கோர்த்து விடுகிறான். உடனே அபிராமி நல்ல விஷயம் உனக்கு நல்ல மனசு என்று சொல்ல ரம்யா வேறு வழியின்றி பரிகாரமாக அங்கபிரதர்ஷணம் செய்ய அபிராமி கூடவே இருக்கிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சௌந்தரபாண்டியன் சிக்க வைக்க சண்முகம் செய்த விஷயம்.. நடக்க போவது என்ன?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சூடாமணி உத்தமி என்பதை நிரூபிக்க ஒரே ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று, சனியன் ஓட்டலில் சாப்பிட வந்து உட்கார அப்போது ரவுடிகள் ரெண்டு பேர் அவனை முறைத்தபடி இருக்க அவர்களிடம் இருந்து கத்தி கீழே விழ சண்முகம் அரிவாளுடன் ஓடி வர சனியன் பதறியடித்து ஓடுகிறான். சௌந்தரபாண்டியிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் அவன் ஒன்னும் பண்ண மாட்டான் என்று சொல்கிறார்.
பிறகு சனியனின் மனைவி போன் செய்து சண்முகமும் பரணியும் உங்களை தேடி வந்திருப்பதாக சொல்ல, சௌந்தரபாண்டி நீ ஊரை விட்டு போய்ட்டு, உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான். சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்க சண்முகம் சனியன் மனைவியிடம் பேசி தனது வழிக்கு கொண்டு வர அவள் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து சண்முகம் உங்களை பத்தி ஒரு விஷயம் சொல்லி இருக்கான் அதை நேரில் தான் சொல்லணும் என்று சொல்லி வீட்டிற்கு வர சொல்கிறாள்.
ஒரு பக்கம் சௌந்தரபாண்டி வந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சனியன் வீட்டிற்கு ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பயத்தில் மதுமிதா.. ஜீவாவிடம் கர்ப்பத்தை உடைக்க முடிவெடுத்த மாயா, சகுந்தலாவால் ட்விஸ்ட்
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கௌதம் மதுமிதாவை சந்தித்து பேச வந்திருந்த நிலையில் இன்று, கௌதம் திரும்பவும் கல்யாண விஷயம் பற்றி பேச மதுமிதா கோபப்படுகிறாள். நீங்க நெனச்சா வேணாம்னு சொல்வீங்க, நினைச்சா வேணும்னு சொல்லுவீங்க.. உங்களுக்கு எங்க குடும்பத்தை பார்த்தால் எப்படி தெரியுது என்று சத்தம் போடுகிறாள்.
உடனே கௌதம் நானே கல்யாணம் விஷயமா உங்க வீட்ல பேசுறேன் என்று சொல்ல மதுமிதா வேண்டாம் எங்க வீட்டுக்கு 66 படிக்கட்டு ஏறனும், லிப்ட் கூட வேலை செய்யாது. நானே சொல்கிறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு மாயா ஜீவாவை வீட்டுக்கு வரவைத்து கர்ப்பம் குறித்து சொல்லி விடலாம் என்று முடிவு எடுக்க ஜீவாவும் கிளம்பி வீட்டுக்கு வர சகுந்தலா மாயாவிடம் ஜீவாவிடம் கர்ப்பம் குறித்து சொல்ல போறியா? இது கௌதமுக்கு தெரிஞ்சா எவ்வளவு கோபப்படுவான் தெரியுமா? என்று திட்டுகிறாள்.
இந்த சமயத்தில் ஜீவா வீட்டுக்கு வந்து விட மாயா மற்றும் ஜீவா இருவரும் ரூமுக்குள் தனியாக பேசி சமாதானத்திற்கு வருகின்றனர். அதேபோல் மறுபக்கம் மதுமிதா வீட்டுக்கு வந்து கௌதம் கல்யாண விஷயமாக பேசி விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். குடும்பத்தினர் சந்தோஷத்தை பார்த்த மதுமிதா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.