/indian-express-tamil/media/media_files/2025/07/25/download-10-2025-07-25-16-33-04.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163346-2025-07-25-16-35-15.png)
தான் நடித்த 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25 அன்று வெளியாகவுள்ள நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் மற்றும் ஆன்மீகப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நித்யா மேனன்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163354-2025-07-25-16-35-15.png)
"சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி. கூட்டத்தில் சேர முடியவில்லை. நண்பர்கள் இருந்தாலும் தனியாகவே இருப்பேன். அன்றிலிருந்தே நான் மற்றவர்களை விட வித்தியாசமானவள்" என்று அவர் தனது தனிப்பட்ட இயல்பைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். இந்த மனநிலைதான் தனது வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகளுக்குக் காரணம் என்பதையும் அவர் உணர்த்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163404-2025-07-25-16-35-15.png)
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காதல் உறவுகள் ஒரு பகுதியாகவே இருந்ததை நித்யா மேனன் மறைக்கவில்லை. "ஒரு வயதுக்கு வந்ததும் எனக்கும் காதல் அனுபவம் கிடைத்தது. ஒவ்வொரு அனுபவமும் வலியையே தந்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறை என் இதயம் உடைந்து போனது" என்று நித்யா மேனன் மனம் உருகப் பேசினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163409-2025-07-25-16-35-15.png)
ஆனால், இன்று அந்த எல்லா உணர்வுகளிலிருந்தும் தான் முழுமையாக வெளியே வந்துவிட்டதாக நித்யா மேனன் உறுதியாகக் கூறுகிறார். "தனியாக மாதக்கணக்கில் பயணம் செய்கிறேன். என் வேலைகளை நானே செய்கிறேன். சில சமயங்களில் மாதக்கணக்கில் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவேன்." என்று அவர் பேசியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163416-2025-07-25-16-35-15.png)
திருமணம் குறித்து நித்யா மேனன் மிகவும் ஆழ்ந்த உணர்வுடன் பேசினார். "வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் வாழவில்லை. ஒரு நல்ல துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ரத்தன் டாடாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுபோல நானும் தனிமையை மிகவும் ரசிக்கிறேன்" என்று கூறி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/13/OzJ4p4z9yVyKH8qRCSBS.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-163434-2025-07-25-16-35-15.png)
காதல் தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசிய அவர், திருமணம் இல்லாமலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222810-2025-07-14-22-28-27.png)
இப்போது அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் சேர்த்து 'தலைவன் தலைவி' என்ற படத்தில் நடித்துள்ளார். அது இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.