New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/D16SofXj2P6L8moXXDvz.jpg)
தமிழ் சினிமாவில் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘விடுதலை 2’ படத்திற்கு பிறகு ‘ட்ரெயின்’, ‘ஏஸ்’ என இரண்டு புதிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, "பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்" உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இதனையடுத்து இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், அது பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி, 'புஷ்பா', 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக கலக்கிய பகத்பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இருவரும் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ஒரே காட்சியில் ஒன்றாக நடித்ததில்லை என்பதால் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.