New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/08/jrkAQO4zR3w8HJGeGYne.jpg)
பிரபல மலையாள நடிகை ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இச்சிறுமியை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
சினிமா நட்சத்திரங்களின் இளம் வயது மற்றும் அரிய புகைப்படங்களை காண பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில், இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
கேரள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த திவ்யா உன்னியின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. இவர் மூன்று வயதிலேயே பரதநாட்டிய நடனப் பயிற்சியைத் தொடங்கினார். அதன் பின்னர், குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டத்திலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், தமிழிலும் சில முக்கியமான படங்களில் நடித்துள்ளார். 'கண்ணன் வருவான்', 'பாளையத்து அம்மன்', 'சபாஷ்', 'வேதம்' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார்.
நடிப்பு தவிர நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அதில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் கேரள மாநில பள்ளி கலைத்திருவிழா போட்டிகளில் (Kerala School Kalolsavam statewide competitions) "கலைத்திலகம்" என்ற உயரிய பட்டத்தை இவர் வென்றுள்ளார்.
இது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது அதிகமான படங்களில் நடிப்பதில்லை என்றாலும், இன்றளவும் பலருக்கு பிடித்தமான நடிகராக திவ்யா உன்னி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.