ஆட்டோ டிரைவர் வேலை; தேசிய விருது பெற்ற நடிகருக்கு இந்த நிலையா? காரணம் என்ன?
சினிமா துறை நிச்சயம் இல்லாதது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சினிமா துறை நிச்சயம் இல்லாதது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்திய சினிமா உலகில் தேசிய விருது என்பது பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அப்படி தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
2/5
1988-ஆம் ஆண்டு 'சலாம் பாம்பே' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இந்தி திரைப்படத்தில் வரும் சிறுவன் பாத்திரத்தில் சஃபீக் சையத் என்பவர் நடித்திருந்தார்.
3/5
குறிப்பாக, இப்படத்தின் முன்னணி கதாபாத்திரமே இந்த சிறுவனுடையது தான். மும்பை தெருக்களில் வாழும் கதாபாத்திரத்தில் சஃபீக் சையத் நடித்திருப்பார். இந்த பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது.
Advertisment
4/5
ஆனால், வளர்ந்த பின்னர் சஃபீக் சையதிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூருவிற்கு திரும்பிய அவர், சில கன்னட தொலைக்காட்சி தொடர்களில் கேமரா உதவியாளராக பணியாற்றினார்.
5/5
எனினும், ஒரு கட்டத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டும் நிலைக்கு சஃபீக் சையத் தள்ளப்பட்டார். தேசிய விருது பெற்ற ஒரு நபர், தற்போது ஆட்டோ ஓட்டுகிறார் என்று கூறினால் ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கும். ஆனால், இதுவும் நிதர்சனம் தான்.