New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/14/Y0N27Cm5aYfVDZGDqyHZ.jpg)
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் சின்னத்திரை நடிகர்களுக்கும் தற்போது இருக்கிறது. அந்த வகையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு சின்னத்திரை நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இவர் யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் 'மைனா'வாக நமது மனம் கவர்ந்த நடிகை நந்தினியின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் இது. 'அரண்மனைக்கிளி' மற்றும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற சீரியல்களில் நடித்துள்ள நந்தினி, 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார்.
சின்னத்திரை மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'விக்ரம்' திரைப்படத்தில் நந்தினி நடித்திருந்தார். அதில், விஜய் சேதுபதியின் மனைவியாக நந்தினி நடித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் என்பவரை நந்தினி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. நகைச்சுவை பாத்திரங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், அழுத்தமான சில பாத்திரங்களையும் ஏற்று நடித்து தனது திறமையை நந்தினி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் நந்தினி ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ரீல்ஸ், போட்டோஷூட்டுகள், தனது சீரியல், திரைப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்களிடம் நந்தினி பகிர்ந்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.