New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/10/ZyHn8SKjkRPPsDOoG37Y.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவருடைய குழந்தைப் பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாக உலா வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து, அவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?
சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் பல இப்போது ட்ரெண்டாகி வருவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், இப்போது யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
மிமிக்ரி ஆர்டிஸ்டாக சின்னத்திரையில் நுழைந்து, தனது கடின முயற்சியால் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் சிவகார்த்திகேயனின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் இது.
தனது ஆரம்ப காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். அதன் பின்னர், அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வளர்ந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அடியெடுத்து வைத்தார்.
'மெரினா', 'மனம் கொத்தி பறவை', 'எதிர்நீச்சல்' போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுக்கு நாயகன் அந்தஸ்தை கொடுத்தன. எனினும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
தொடர்ந்து, காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், 'காக்கி சட்டை' திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதன் பின்னர், பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில்'மாவீரன்', 'அமரன்' உள்ளிட்ட படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.