New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/15/cYjgu3ycmdV8RZ8KoiBk.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி, இப்புகைப்படத்தில் இருப்பவர் யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
முன்னணி சினிமா நட்சத்திரங்களின் குழந்தைப் பருவ மற்றும் அரிய புகைப்படங்கள், தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், இப்புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, இப்போது யார் என்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தமிழ் சினிமா ரசிகர்களால் 'புன்னகை அரசி' என்று அன்போடு அழைக்கப்படும் சினேகாவின் இளம் வயது புகைப்படங்கள் தான் இவை. கடந்த 2000-ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில், பிரசாந்திற்கு ஜோடியாக 'விரும்புகிறேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. எனினும், இப்படம் வெளியாவதற்கு முன்பாக, 'என்னவளே' என்ற படம் வெளியானது.
இதைத் தொடர்ந்து, 'ஆனந்தம்', 'பார்த்தாலே பரவசம்', 'உன்னை நினைத்து', 'ஏப்ரல் மாதத்தில்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சினேகா நடித்துள்ளார். குறிப்பாக, கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த காதல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும், தனது கலைப்பயணத்தை சினேகா தொடர்கிறார்.
அண்மையில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த 'கோட்' திரைப்படம் வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சினேகா நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.