'சட்டம் என் கையில்'
'சட்டம் என் கையில்' இயக்குனர் சச்சி இயக்கத்தில் சதிஷ், வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 6-ந் தேதி டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பி.டி.சார்'
பி.டி.சார் - இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. இப்படம் கடந்த 6-ந் தேதி டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'அந்தகன்'
அந்தகன் - தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமானவர் தியாகராஜன், இவர் இயக்குனராக பணியாற்றி இப்படத்தினை இயக்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் தியாகராஜன் மகன் பிரஷாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 6-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஜாலியோ ஜிம்கானா'
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இப்படம் கடந்த 7-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஐ அம் காதலன்'
நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றியுள்ள படம் 'ஐ அம் காதலன்'. இந்த படத்தில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 7-ந் தேதி மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஆரகன்'
இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆரகன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, விவேக் இசையமைத்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 8-ந் தேதி (நேற்று) வெளியாகி உள்ளது.
'சூக்ஷமதர்ஷினி'
நடிகை நஸ்ரியா பசில் ஜோசப்புடன் இணைந்து சூக்ஷமதர்ஷினி படத்தில் நடித்துள்ளார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (9-ந் தேதி) ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'அதோமுகம்'
சுனில் தேவ் எழுதி இயக்கிய படம் அதோமுகம். நாடகம் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தில் எஸ். பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன், ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்பை ஆப்பை இன்ஸ்டால் செய்வதால் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே அதோமுகம் படத்தின் கதை ஆகும். இப்படம் நாளை (10-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.