/indian-express-tamil/media/media_files/2025/03/01/Lr1excQy1i6LLq3SyNks.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/01/gTNFiyQa8JOW6T0fmPLp.png)
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'. கடந்த 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/juPiO9Vyn5SQ2H20wRnH.png)
பிளட் அண்ட் பிளாக்
குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் பிளட் அண்ட் பிளாக் . இப்படத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த படத்தை ப்ளூ வேல் என்டர்டெயின்மென்ட்ஸ் பதாகையின் கீழ் ஹரி கிருஷ்ணன் வாசுதேவன் தயாரித்துள்ளார். இப்படம் இன்று ( 27-ந் தேதி) டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/4nmMPUO4PpzjUvG2m4Nz.png)
சுழல் 2
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் ’சுழல் 2’. மேலும் நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப் தொடர் நாளை (28-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/olufK2JaqHlmichZo1Nx.png)
குடும்பஸ்தன்
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் 'குடும்பஸ்தன்'. இதில் மணிகண்டன் மற்றும் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/GJ1JswcVoRIv8vuMvH5S.png)
பராரி
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளார். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/TEOxrXazwAhx5KYZK9eN.png)
மாருதி நகர் போலீஸ் ஸ்டோஷன்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளியான படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டோஷன்'. இதில் ஆரவ், வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/N49soPG1BWHfczmig7Tc.png)
ஆபரேஷன் ராவன்
வெங்கட சத்யா எழுதி இயக்கிய திரில்லர் திரைப்படம் 'ஆப்ரேஷன் ராவன்'. இப்படத்தில் ரக்ஷித் அட்லூரி மற்றும் சங்கீர்த்தன விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு சைக்கோ கொலையாளியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படம நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/rQngdtHvnh6Y6H9ZO2pm.png)
போகுமிடம் வெகுதூரமில்லை
நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/9Gr2nmZ27VKunwVfrbqz.png)
சங்கராந்திகி வஸ்துன்னம்
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடித்துள்ள படம் ’சங்கராந்திகி வஸ்துன்னம்’. இதில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 1-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.