/indian-express-tamil/media/media_files/2025/03/13/9DQAJzzcrhvyOkEOq1uO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/13/kYhAv9xmi5O2d03l3bNE.png)
மோனா 2
கடந்தாண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் 'மோனா 2'. கார்ட்டூன் பிரியர்களை அதிகம் ஈர்த்த இப்படம் நாளை 14ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/zHbzp0nsGBxciRSnMh7j.png)
ஏஜென்ட்
இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்மூட்டி, சாக்ஷி வைத்யா, டினோ மோரியா, வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'ஏஜென்ட்'. ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை 14ம் தேதி வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/4FuS6pn2Gh8FH3QvVbys.png)
ராமம் ராகவம்
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் 'ராமம் ராகவம்'. அப்பா மகன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் நாளை 14ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/NJddm0DK5dJt8GGwCmIL.png)
காதல் என்பது பொதுவுடைமை
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. தன்பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைத்துள்ளது. இப்படம் இன்று 13ம் தேதி டெண்டுகொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/NS7FFhkSypLt3Ayphyc5.png)
ஒரு ஜாதி ஜாதகம்
மலையாளத்தில் வெளியான காமெடி கலாட்டா திரைப்படம் ஒரு ஜாதி ஜாதகம். திருமணத்தில் நடக்கும் கலாட்டாக்கள், ஜாதகத்தில் வரும் குழப்பங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை 14ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/qtXGORO5wmxcSQcRKNOT.png)
ரிங் ரிங்
எஸ். சக்திவேல் இயக்கத்தில் சாக்ஷி அகர்வால், அர்ஜுனன், விவேக் பிரசன்னா, சஸ்வயம் சித்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரிங் ரிங்'. காமெடி, காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/niIS3ELx8NmCBVkbzBfj.png)
சீசா
நடிகர் நடராஜன் சுப்பிரமணியம் நடிப்பில் குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளியான க்ரைம், திரில்லர் திரைப்படம் 'சீசா'. கொலைக்கு பின்னல் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டுவரும் போலீசின் கதையே இப்படத்தின் த்ரில்லிங்கான கதைக்களம். இப்படம் நாளை 14ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/FfySPoPANAzniYsZDGWb.png)
2கே லவ் ஸ்டோரி
காதலர் தினத்தன்று தியேட்டரில் ரிலீசான ரொமான்டிக் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இப்படம் நாளை 14ம் தேதி அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/YOO3uzgxHjv9jhIQlUjN.png)
பொன்மான்
பசில் ஜோசப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் பொன்மான். காமெடி த்ரில் கலந்த கதைக்களத்தில் வெளியான இப்படம் நாளை 14ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.