குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, பின் கதாநாயகியாக அறிமுகமாகி 90ஸ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
2/4
தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்த மீனாவின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
3/4
'என் ராசாவின் மனசிலே', 'முத்து', 'அவ்வை சண்முகி', 'நாட்டாமை', 'வானத்தைப் போல' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார், இவரும் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
Advertisment
4/4
மீனா ஒரு பின்னணிப் பாடகி, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் மற்றும் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். பல மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். தனது கணவர் மறைவுக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.