தென்னிந்தியா பூர்வீகம்; பாலிவுட்டை கலக்கும் இந்த சிறுமி பருத்தி வீரன் நடிகைக்கு உறவினர்: யார்னு கண்டுபிடிங்க!
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியாக இந்த பாலிவுட் நடிகையின் சிறுவயது புகைப்படம் வைத்து அவர் யார் என்று கண்டுபிடிப்போம்.
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியாக இந்த பாலிவுட் நடிகையின் சிறுவயது புகைப்படம் வைத்து அவர் யார் என்று கண்டுபிடிப்போம்.
தென்னிந்திய குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருகிறார். தனது கருத்துக்களை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த நடிகைக்கு தமிழ் இந்தி மொழிகளில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
2/3
தென்னிந்தியாவின் கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை வித்யா பாலன் தான். இயக்குநர் மணிரத்னத்தின் குரு, இயக்குநர் பால்கியின் பா உள்ளிட்ட படங்களிலும், ஹெச் வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/3
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ''தி டர்ட்டி பிக்சர்ஸ்'' (The dirty pictures) படத்தில், சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்கு இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பிரபல நடிகை பிரியாமணியும் நடிகை வித்யாபாலனும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.