திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவர்.
2/2
இவர் பெரும்பாலும் "மெகாஸ்டார்" என்று அழைக்கப்படுகிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில், சிரஞ்சீவி தெலுங்குத் திரையுலகில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார்.