/indian-express-tamil/media/media_files/2025/08/16/download-2-2025-08-16-18-35-14.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-182249-2025-08-16-18-22-57.png)
கவிஞர் கண்ணதாசன்
கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வரும் 'கலங்காதிரு மனமே' பாடல் தான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடலாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-182459-2025-08-16-18-25-05.png)
கவிஞர் வாலி
அழகர்மலை கள்வன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் 'நிலவும் தாரையும் நீயம்மா' என்ற பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல்.
/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-182706-2025-08-16-18-27-11.png)
கவிஞர் கங்கை அமரன்
பதினாறு வயதினிலே 1977 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் வரும் 'செந்தூரப்பூவே' பாடல் தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல்
/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-182926-2025-08-16-18-29-31.png)
கவிப்பேரரசு வைரமுத்து
நிழல்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் 'இது ஒரு போன் மாலை பொழுது' என்ற பாடல் தான் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய முதல் பாடலாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-183243-2025-08-16-18-32-50.png)
கவிஞர் அறிவுமதி
சிறைச்சாலை என்பது 1996-ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மலையாளத்தில் கலாபாணி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் வரும் 'செம்பூவே பூவே' என்ற பாடல் தான் அறிவுமதி எழுதிய முதல் பாடலாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.