/indian-express-tamil/media/media_files/2025/03/21/yHBniXSvNke2LZKJJ3ma.jpg)
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் நாளை முதல் அரங்கேறுகிறது. கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/Yz0I0zXZcN6Gf6lCxFfF.jpg)
எம்.எஸ் தோனி, வயது: 43 | அணி: சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது 43-வது வயதில் களமாடுகிறார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி. இந்த அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த அவர், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கரங்களை வலுப்படுத்தி கோப்பை வெல்ல உறுதி பூண்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/i2yHQii341kj7ur14gMi.jpg)
ஃபாஃப் டு பிளெசிஸ், வயது: 40 | அணி: டெல்லி கேபிடல்ஸ்
ஐ.பி.எல் தொடரில் ஆடிய பெரும் அனுபவத்தை கொண்ட தென் ஆப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸ், இம்முறை டெல்லி அணியில் களமாட இருக்கிறார். சி.எஸ்.கே-வில் தரமான தொடக்க வீரராக இருந்த அவர், ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். தற்போது மீண்டும் ரன் வேட்டை நடத்த ஆர்வகமாக இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/0eogCNclWFUBNoB0KwM0.jpg)
ரவிச்சந்திரன் அஸ்வின் வயது: 38 | அணி சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்திய ஆஃப்-ஸ்பின்னரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், ஐ.பி.எல் தொடரில் தனது பயணத்தை தொடங்கிய அதே அணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது, சென்னை அணிக்கு சுழற்பந்து வீச்சில் வலு சேர்க்க இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/fHPlFdm3tQ1RdP5HYxbI.jpg)
ரோகித் சர்மா வயது: 37 | அணி: மும்பை இந்தியன்ஸ்
எம்.எஸ் தோனியைப் போலவே, ரோகித் மும்பை அணிக்காக உறுதியான வீரராக இருந்து வருகிறார், மேலும் அணியின் வெற்றியில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் முக்கிய பங்கு வகித்தார். சி.எஸ்.கே அணியைப் போல், அவரது தலைமையிலான மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. இந்த ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக ரோகித் இருக்க மாட்டார் என்றாலும், தொடக்க வீரராக அவரது பங்கு மும்பை அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/21/EL5O4Of1Gt88FaSDNZ38.jpg)
மொயீன் அலி, வயது: 37| அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முன்னாள் இங்கிலாந்து வீரரான மொயீன் அலி ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரராக இருக்கிறார். மிகவும் திறமையான ஆஃப்-ஸ்பின்னரான அவரால், மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆட முடியும். அவரும் இதற்கு முன்பு சில அணிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது திறமைகளை சி.எஸ்.கே கச்சிதமாக பயன்படுத்தியது. அதேபோல், கொல்கத்தா அணியிலும் செயல்பட அவர் ஆவலுடன் இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us