இதை பின்பற்றினால் போதும்... உங்களுக்கு முகப்பருக்களே வராது!
முகப்பரு அதிக எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியா காரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவு, ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய காரணங்கள்.
முகப்பரு அதிக எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியா காரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவு, ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய காரணங்கள்.
பெண்களுக்கு பருவமடையும் போது முகப்பரு மிகவும் பொதுவானது என்றாலும், அது எல்லா வயதினரையும் பாதிக்கும் பிரச்சனையாக தற்போது மாறியுள்ளது. முகப்பரு பிரச்சனையை சரி செய்ய உதவும் எளிய வழிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
2/6
மன அழுத்தம்
மன அழுத்தம் கொண்ட நபர்கள் அதிக முகப்பரு பிரச்சனையை சந்திக்கிறார்கள். முகப்பரு வராமல் தடுக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிக முக்கியம். எனவே மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் தியானம், யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
3/6
தூக்கமின்மை
தூக்கமின்மை முகப்பருவுக்கு பங்களிக்கிறது. இப்போதெல்லாம் பலர் தங்கள் மொபைல் போன்களைப் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதனால் தூங்க செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு முகப்பருவை உண்டாக்குகிறது. எனவே தினமும் 7 - 8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.
Advertisment
4/6
கெமிக்கல் ப்ராடெக்ட்டுகளை பயன்படுத்துவது
பலர் தங்கள் அழகை மேம்படுத்த கடுமையான ரசாயன பொருட்களை கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறார்கள், ஆனால் இவற்றை பயன்படுத்துவது முகப்பருவுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, உங்கள் சமையலறையில் உள்ள பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி பளபளப்பான சருமத்தைப் பெறலாம். உதாரணமாக மஞ்சள் தூள், தயிர் கலந்து பேஸ்பேக்காக அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவாகும்.
5/6
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்
ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும். முகப்பருவைப் போக்க விரும்பினால், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அதிக சர்க்கரை உட்கொள்வது முகப்பருவுக்கு வழிவகுக்கும். மேலும், நீங்கள் துரித உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும். இதிலுள்ள அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
6/6
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை இருந்தாலும் முகப்பரு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் பல்வேறு உடல் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இது பெண்களுக்கு வரும் முகப்பருவுக்கு ஒரு பொதுவான காரணமாகும். ஹார்மோன் மாற்றங்கள் பாக்டீரியா உருவாவதற்கு வழிவகுக்கும், இது முகப்பருவை ஏற்படுத்தும். எனவே உங்கள் ஹார்மோன்களை சீராக்கும் உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news