/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134642-2025-08-29-13-49-47.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134659-2025-08-29-13-50-01.png)
சோனாக்ஷி ஒரு பிரபல பாலிவுட் நடிகை. 2010 முதல் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், ஒரு பிரபல நடிகரின் மகளாகவும் உள்ளார். தனது முதல் படத்திற்கு முன் அவர் தனது உடல் எடையை குறைத்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134716-2025-08-29-13-50-01.png)
சோனாக்ஷி 18 வயதில் ஜிம்மிற்குச் சென்றபோது, 30 வினாடிகளும் ஓட முடியவில்லை. இதனால் எடையை குறைக்கத் தீர்மானித்து முயற்சி செய்தார். அதன் விளைவாக 2 ஆண்டுகளில் 30 கிலோ எடையை குறைக்க முடிந்தது. இதற்காக அவர் டயட், உணவு பழக்கம், உடற்பயிற்சி என அனைத்தையும் கடைபிடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134727-2025-08-29-13-50-02.png)
சோனாக்ஷிக்கு ஜிம்மில் வெயிட் தூக்குவது பிடிக்காமல் இருந்ததால், வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் செய்து எடையை குறைத்தார். அவர் விரும்பும் பயிற்சிகளில் பிலாட்டீஸ் முக்கியமானது. மேலும், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கார்டியோ மற்றும் வேகமான நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கடைபிடிக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134739-2025-08-29-13-50-02.png)
அடிக்கடி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை யோகா, வெயிட் ட்ரெயினிங் போன்றவற்றை செய்யும் இவர் கூடவே நீச்சல் பயிற்சி, டென்னிஸ் விளையாடுவது போன்ற விஷயங்களையும் செய்கிறார். இதனால் இவரது உடல் எடை அப்படியே பேலன்ஸாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134803-2025-08-29-13-50-02.png)
சோனாக்ஷி சின்ஹா பெரும்பாலும் பிரெட், சர்க்கரை, பொறித்த உணவுகளை தவிர்க்கிறார். அவ்வப்போது பீட்ஸா சாப்பிட்டாலும், குறைவாகவே உண்பார். தற்போது, அவர் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதால், ஜங்க் உணவுகளையும் கடை ஸ்னாக்ஸ்களையும் சாப்பிடுவதில்லை. ஸ்னாக்ஸ் தேவைப்படும்போது நட்ஸ், விதைகள் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-134825-2025-08-29-13-50-02.png)
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சோனாக்ஷி தண்ணீரை அதிகமாக குடித்து ஹைட்ரஷன்-ஐ பராமரித்தார். சில நேரங்களில் பழச்சாறு மற்றும் இளநீரையும் அருந்துவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.