இன்னும் பலப்பல நன்மைகளை தரக்கூடியது இந்த வெற்றிலை. ஆனால், உடல் எடையை குறைப்பதிலும் மிகப்பெரிய பங்கு இந்த வெற்றிலைக்கு உள்ளது. காரணம், மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தை இந்த வெற்றிலை கொண்டிருக்கிறது.. இதைத்தவிர, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் உள்ளன.