/indian-express-tamil/media/media_files/2025/03/25/ttGDHnmE9avO73QkJqEI.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/25/TJHVWGmBH5xBTyYTlr0i.jpg)
இஞ்சி சருமத்தை பிரகாசிக்க செய்யும். இஞ்சி ஆரோக்கிய நன்மைகளை அளிக்க வல்லது. இதன் பயன்பாடு சருமத்துக்கும் நன்மை பயக்கும். இஞ்சியில் ஆக்ஸிஜனேற்றங்கள் தவிர, வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சருமத்துக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இஞ்சி கொண்டு சருமத்தை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/VXrKKvKEPifvJr6qnoPJ.jpg)
இஞ்சி மற்றும் லெமன் எல்லா சருமத்துக்கும் பயனளிக்கும். இது சருமத்துக்கு தீங்கு செய்யாமல் பாதுகாக்கலாம். சருமத்தில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் முகத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. இஞ்சி சருமத்துக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/mksga9MlelHuMbrH4lUX.jpg)
இஞ்சியை மண் போக அலசி தோல் நீக்கி வட்ட வடிவில் நறுக்கி எரிச்சல் இருக்கும் இடங்களில் தேய்த்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/ktv4hfP7BfvE18SKPrL1.jpg)
இஞ்சி ஆண்டி செப்டிக் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இது பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையிலிருந்து சருமத்துக்கு நிவாரணம் அளிக்கிறது. அதோடு முகப்பரு மற்றும் சொறி உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது. முகப்பரு தீவிரமாகாமல் தடுத்து நிறுத்த இஞ்சி உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/ZG6o1TeAIeU9MAUijnkU.jpg)
வயதான எதிர்ப்பு அறிகுறிகளை குறைக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சி உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், நெற்றியில் இருக்கும் நேர்த்தியான கோடுகள் குறைகிறது. அவை தீவிரமாகாமல் தடுக்கப்படுகிறது வயதான தோற்றம் தெரியாமல் இளமையாக வைத்திருக்க செய்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/YmwgqPJqD3Uubin8aKWh.jpg)
இஞ்சியை சிறியதாக சாப் செய்து சுடு தண்ணீர் கொஞ்சமாக விட்டு அதில் லெமனை பிழிந்து அதை குடித்து வந்தால் சருமத்திற்கு ஆயிரம் நன்மைகள் உண்டு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.