/indian-express-tamil/media/media_files/2025/04/29/46k5K6dHsEptubCScFl6.jpg)
Natural Hair color at home
/indian-express-tamil/media/media_files/2025/01/19/8I5HZUrXUFXPmWm8PTzE.jpg)
இன்னைக்கு நிறைய பேரு பார்லர் போய் அவங்களோட தலைமுடியை கலர் கலரா மாத்த ஆசைப்படுறாங்க. ஆனா இயற்கை முறையிலேயே அதுக்கான வழிகள் இருக்கு. உங்க தலைமுடிக்கு இயற்கையான முறையில் கலரை கொடுக்கும் ஐந்து டிப்ஸ் பற்றி தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார் டாக்டர் பிள்ளை.
/indian-express-tamil/media/media_files/D3kxaibViK5aNP2pUXxY.jpg)
பிரெளன்
உங்க தலைமுடிக்கு பிளென்ட், பிரெளன் கலர் வேணும் நினைச்சா நீங்க காபி பவுடர் யூஸ் பண்ணலாம். ஒரு கப் தண்ணீர்ல, இரண்டு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து நல்ல கொதிக்க வைங்க. அதை நல்ல சுண்ட காய்ச்சு அரைக்கப் அளவுக்கு வரும்போது அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. இதை குளிரவச்சு வடிகட்டி உங்க தலையில தேய்ச்சுட்டு ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு போடாம வெறும் தண்ணீர்ல மட்டும் உங்க தலைமுடிய அலசுங்க. இதை தொடர்ந்து செய்ஞ்சா உங்க தலைமுடிக்கு பிளென்ட் கலர் கிடைக்கும். இதை ஆண்கள், பெண்கள் யாரு வேணாலும் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/istockphoto-13052-571856.jpg)
டீ
இயல்பான கருமையான கூந்தலுக்கு, தேயிலை தூளைப் பயன்படுத்துங்க. இரண்டு டீஸ்பூன் தேயிலை தூளை ஒரு கப் தண்ணீர்ல கொதிக்க வைத்து அரை கப் வர்ற அளவுக்கு சுண்ட காய்ச்சுங்க. இதை ஆறவச்சு தலைமுடியில தடவி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் கழுவுனா தலைமுடி கருப்பாகும்.
/indian-express-tamil/media/media_files/5PFjzcMSjPUUOPbXGunU.jpg)
வால்நட்
வால்நட்டில் இயற்கையான பிக்மென்ட் இருக்கு, இதை தண்ணீர்ல கொதிக்க வச்சு வடிகட்டி, அந்த தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவலாம். வால்நட் கலர் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/9JibBmlSfjbu5g0eu5M4.jpg)
நெல்லிக்காய்
இதுல வைட்டமின் சி நிறைய இருக்கு. இதை தண்ணீர்ல கொதிக்க வச்சு வடிகட்டி, அதை காபி, டீ தண்ணீர்ல கலந்து தடவுனா முடி நல்ல கருப்பாகும். முடி நல்ல வளரும்.
/indian-express-tamil/media/media_files/qKOOBBaS7XRKT5FbQMl5.jpg)
பீட்ரூட்
பீட்ரூட் ஜூஸ் எடுத்து கொஞ்ச நேரம் ஊறவச்சுட்டு அதை வடிகட்டி அந்த சாற்றை தலைமுடியில தடவுனா தலைமுடிக்கு பீட்ரூட் நிறம் கிடைக்கும். தலைமுடிக்கு இந்த இயற்கை வழிகள் பயன்படுத்தி கலர் பண்ணும் போது முடி நிறம் மாறும். மேலும் வளரவும் செய்யவும். இந்த இயற்கை முறைகள் தற்காலிகமானவை தான். ஆனால் பாதுகாப்பானது என்கிறார் டாக்டர் பிள்ளை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.