ராஜமௌலி பட ஹீரோ; ஒரே படத்தில் உச்சம் தொட்ட டாப் ஸ்டார்: இந்த சிறுவனுக்கு டிமாண்ட்
'பான் இந்தியா' நடிகரின் குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?
'பான் இந்தியா' நடிகரின் குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?
சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் எப்போதுமே சமூக ஊடகங்களில் வைரலாக பரவும். குறிப்பாக, அவர்களது குழந்தைப் பருவ புகைப்படமும் அடிக்கடி ட்ரெண்டாகும். அதன்படி, இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இச்சிறுவனை, உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
2/5
'பான் இந்திய' சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உலா வரும் பிரபாஸின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் இது. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பிரபாஸ், இன்று உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக விளங்குகிறார்.
3/5
தெலுங்கு சினிமாவில் எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'பாகுபலி' திரைப்படம், இந்தியா முழுவதும் இவரை கொண்டு சேர்த்தது. அதன் பின்னர், 'பான் இந்தியன் ஸ்டார்' அந்தஸ்த்தை பிரபாஸ் அடைந்தார்.
Advertisment
4/5
இதைத் தொடர்ந்து, 'சாஹோ', 'ராதே ஷியாம்', 'சலார்' போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் பிரபாஸ் நடித்துள்ளார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான 'கல்கி' திரைப்படத்தில், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர்.
5/5
இந்நிலையில், 'ராஜா சாப்' என்ற காமெடி கலந்த ஹாரர் திரைப்படத்தில் பிரபாஸ் தற்போது நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.