/indian-express-tamil/media/media_files/2025/05/29/BYnw41xbkmqJ5SrmuhDZ.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/29/BYnw41xbkmqJ5SrmuhDZ.jpg)
சினிமா பிரபலங்களின் குழந்தை பருவப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். தங்கள் விருப்பமான நட்சத்திரங்கள் குழந்தை பருவத்தில் எப்படி இருந்தார்கள் என்று அறிய யாருக்குத்தான் ஆசை இருக்காது? இப்போது, இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின் குழந்தைப்பருவப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/29/xd7iz8wuaFUZ5XUpjpdq.jpg)
நடிகை கஜோலின் குழந்தை பருவப் புகைப்படம் தான் இது. இவர் 1992-ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர், எண்ணிலடங்காத பல்வேறு வெற்றிப் படங்களில் இவர் கொடுத்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/29/0RSzsKGH7Se4SbRNawKA.jpg)
சல்மான் கான், அமிதாப் பச்சன், அமீர் கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற பலருடன் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து இவர் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' (Dilwale Dulhania Le Jayenge), இவரை உலகம் எங்கும் கொண்டு சேர்த்தது.
/indian-express-tamil/media/media_files/2025/05/29/kD5v7wYFs30sVtj6RsDY.jpg)
கடந்த, 1997 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில், பிரபுதேவா மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் இணைந்து 'மின்சார கனவு' என்ற திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார். இப்படம் இவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் 2017-ஆம் ஆண்டில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/29/hoTParuUI8u5YkLlbdeo.jpg)
தற்போது, க்ரிதி சனோனுடன் இணைந்து 'டோ பட்டி' (Do Patti) என்ற திரில்லர் திரைப்படத்தில் கஜோல் நடித்து வருகிறார். அதோடு, கரண் ஜோஹர் இயக்கும் ஒரு படத்தில் இப்ராஹிம் அலி கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து நடிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.