New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/13/CiDQnYkT5PhwoMEPtbiU.jpg)
காதலர் தினத்தில் காதலி தனது அன்பான காதலனிடம் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான வார்த்தைகளையும் தான். காதலியின் மனம் கவர்ந்திட உதவும் கவிதைகள், வாழ்த்துகள் இதோ
உறவாக யாரும் வேண்டாம்... உயிராக நீ மட்டும் போதும்... இனிய காதலர் தின நல்வாழ்த்துகள் காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன் மீது நான் காட்டும் காதலைக் கண்டு...
ரோஜா இதழ்களும் தலை குனிந்ததோ... உன் இதழிடம் தோற்ற சோகத்தில்... காதலர் தின நல்வாழ்த்துகள் சுகத்தை பகிர்ந்து செல்லும் அன்பை விட சோகத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது... இனிய காதலர் தின வாழ்த்துகள்
காதல் காற்றை போன்றது... நம்மால் அதைப் பார்க்க முடியாது... ஆனால் அதை உணர முடியும் எந்த நிலையிலும் வரலாம்... எந்த வயதிலும் வரலாம்... அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம்... ஆனால் என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும்... எப்போதுதான் நேரும் என்ற உடல் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்..
முதுமையானாலும் வாழ்க்கை புதுமையாகவே இருக்கும்... மனதிற்குள் உண்மையான காதல் இருந்தால்..! என் வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்வேன் ஆறுதல் கூற நீ துணையாய் இருக்கும் போது...
நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்திவைப்பேன்... நீ விழிக்கும் வரை! உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்... மயக்கம் தெளியாமல் உன்னிடமே உன் நெருக்கத்தில் அடங்கிப் போகிறேன் நான்....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.