/indian-express-tamil/media/media_files/HoXohNkxqRgr0CIYYoMD.jpg)
அண்மையில் தனது மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகியுடன் டேட்டிங் செய்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/AUxeePlYmO1wSqKNsStz.jpg)
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18 ஆம் தேதி அறிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/NxU1DRbUPUejluFdkzPj.jpg)
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3 - 0 என்கிற கண்ணக்கில் வென்ற நிலையில், இந்த தொடரில் ஆடிய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது கிரீஸ் நாட்டில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/Vja70sdAQmVyqrWQ7jnV.jpg)
இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது கிரீஸ் நாட்டில் ஒரே பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/QqtANWoVSGTwBe69iolq.jpg)
யார் இந்த ஜாஸ்மின் வாலியா?
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகி தான் ஜாஸ்மின் வாலியா. இவரது பெற்றோர் இந்தியர்கள் தான். இவர் பிரிட்டிஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான, தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் என்ற தொடரின் மூலமாக பிரபலமடைந்தார்.
/indian-express-tamil/media/media_files/4luN6wDLPn8QdRSDmSFC.jpg)
ஜாஸ்மின் வாலியா, 2014-ம் ஆண்டு தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடல்களை ஜாஸ்மின் வாலியா வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/rTrngDpooy2FDQ1rkdfY.jpg)
2014 ஆம் ஆண்டில் ஈஸ்டர்ன் ஐயின் டாப் 50 கவர்ச்சியான ஆசிய பெண்கள் பட்டியலில் ஜெய்ன் மாலிக் மற்றும் 2015 இல் சனாயா இரானியுடன் இணைந்து ஜாஸ்மின் வாலியா பெயரிடப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/Y74DUF3nUaBqIWfAVB6c.jpg)
2017 இல், ஜாக் நைட் உடன் அவரது தனிப்பாடலான "போம் டிக்கி" பிபிசி ஆசிய நெட்வொர்க்கின் அதிகாரப்பூர்வ ஆசிய இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது.
/indian-express-tamil/media/media_files/OU3dPeXo6jmOXmS4jm7E.jpg)
2018 ஆம் ஆண்டு வெளியான சோனு கே டிடு கி ஸ்வீட்டி படத்தில் " போம் டிக்கி " பாடலுடன் பாலிவுட்டில் அறிமுகமானார் . இந்தப் பாடல் பல வாரங்களாக இந்திய பாப் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
/indian-express-tamil/media/media_files/9UmlY2gu1DCRAxixLut2.jpg)
ஜூலை 2020 இல், வாலியா தனது "வாண்ட் சம்" என்ற தனிப்பாடலுக்காக நியூயார்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டு - ஒன் டைம்ஸ் ஸ்கொயர் - இல் இடம்பெற்ற முதல் பிரிட்டிஷ் இந்தியப் பெண் பாடகி ஆனார்.
/indian-express-tamil/media/media_files/AseIiOu2cNZXoQxcxfRf.jpg)
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/a20xZzLsXIFBU2AmhE64.jpg)
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா - ஜாஸ்மின் வாலியா இருவரும் பின்தொடர்ந்து வருவதுடன், புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/msYNwVZkEShfdeYbtcYo.jpg)
ஜாஸ்மின் வாலியாவும் இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியாவை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார். இதனால் இருவரும் உறவில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.