/indian-express-tamil/media/media_files/2025/03/03/b2FmMaaR2EbOE0ycgNVc.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/03/gtjJPGgpemGKx9wwENdu.jpg)
ஒரு கப் சமைத்த ப்ரோக்கோலியில், ஒருநாளுக்கு நமக்கு தேவையான வைட்டமின்களான A, B6, B2, E, பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.. இவைகள் அனைத்துமே நமக்கு தினமும் தேவைப்படும் அளவைவிட 10 சதவீதம் அகிமாகவே இந்த புரோக்கோலியில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/PuwgIzD982FLLT2iRAM9.jpg)
ரத்த சர்க்கரை ஒழுங்குமுறைக்கு துணைபுரியக்கூடிய கனிமசத்துக்கள் புரோக்கோலியில் உள்ளது.. அத்துடன், ஃபோலேட்டு (folate) சத்துக்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.. இந்த ஃபோலேட்டு சத்து நமக்கு இன்றியமையாத சத்தாகும். குறிப்பாக, நினைத்திறன், மூளை செயல்பாடுகளை ஊக்குவித்து பராமரிக்கக்கூடியது இந்த ஃபோலேட்டு சத்துக்கள்தான்.
/indian-express-tamil/media/media_files/B1FSt92dT2Ixv0Q8XY98.jpg)
ப்ராக்கோலியிலுள்ள வைட்டமின் C, K, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மன நலத்தை அதிகரிக்க செய்வதால்தான், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
/indian-express-tamil/media/media_files/YBVabbpzHjlfYmeyKkzd.jpg)
ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதுடன், ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் உள்ளிட்ட பொருட்களும் நிறைந்திருக்கின்றன. இவை அத்தனையும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/ie-broccoli-1.jpg)
ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் போன்றவை, புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மைக்கொண்டவை,.. சமீபகாலமாகவே பெண்களை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய்கள் உருமாறி வருவதால், புரோக்கோலியை பெண்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/26/gUS6S4FzWDZjfP7W8H7F.jpg)
5 சதவீதத்திற்கும் குறைவான மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு , கால்சியம் செலினியம் உள்ளன.. புரோக்கோலியிலுள்ள வைட்டமின் K சத்துக்கள், நம்முடைய உடலின் ரத்தம் உறைவுக்கு உதவுகிறது, அத்துடன் பற்களின் ஆரோக்கியம், எலும்புகளின் உறுதித்தன்மையும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/26/d8NMYg1lGgOgHgzAuLZz.jpg)
பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் அதிகமாக உள்ளதால், மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடிகிறது.. புரோக்கோலியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, தமனிகள் சேதமாவது குறைக்கப்பட்டு, இதய நோய் அபாயமும் குறைக்க செய்கிறது. புரோக்கோலி சாப்பிடுவதால் செரிமானம் சீராகிறது.. குடல்கள் ஆரோக்கியம் பெறுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us