அடிக்கும் வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க மக்களே... உடலுக்கு என்னென்ன நன்மைகள்?
கரும்பு ஜூஸ் தாகம் தணிக்க, உடனடி ஆற்றல் தர, செரிமானம் மேம்படுத்த, கல்லீரல், சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். இது சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கரும்பு ஜூஸ் தாகம் தணிக்க, உடனடி ஆற்றல் தர, செரிமானம் மேம்படுத்த, கல்லீரல், சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். இது சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கோடைக்கால மதிய வேளையில் கொளுத்தும் வெயிலில் சாலைகளில் அலைந்து திரியும் போது சாலையோர ஜூஸ் கடையில் ஒரு கிளாஸ் குளிர்ச்சியான கரும்பு ஜூஸை ருசிப்போர் ஏராளம். தாகம் தணிப்பது, குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி கரும்பு ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
2/5
கரும்புச் சாற்றில் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன, இது உடனடியாக உடலுக்கு உற்சாகத்தை, ஆற்றலை அளிக்கிறது. கரும்பு ஜூஸில் உள்ள எளிய சர்க்கரைகளை உடல் எளிதில் உறிஞ்சிவிடும். இது நமக்கு உடனடி ஆற்றல் ஊக்கத்தையும், நீர்ச்சத்து அதிகரித்த உணர்வையும் தரும்.
3/5
கரும்பு ஜூஸ் செரிமானத்திற்கு சிறந்தது. கரும்பு ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. தவிர இந்த ஜூஸ் ஒரு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது, மேலும் அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
Advertisment
4/5
அதே போல இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், கரும்பு ஜூஸ் நம் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கரும்பு ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் மிகவும் பிரபலமான நன்மைகளில் ஒன்று கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் ஆகும். கரும்புச் ஜூஸ் கல்லீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் பிலிரூபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது.
5/5
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு சேர்மங்களால் நிரம்பி இருக்கும் கரும்பு ஜூஸை பருகுவது முகப்பரு போன்ற சருமப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் சருமத்தை ஹைட்ரேட்டாக, ஊட்டமாக வைக்க உதவி வயதாகும் அறிகுறிகள் சருமத்தில் தோன்றுவதை தாமதப்படுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news