ஞாபக சக்தி அதிகரிக்கும் இந்த மீன்... கருவேப்பிலை தூவி இப்படி ரெடி பண்ணுங்க: டாக்டர் மைதிலி டிப்ஸ்
இறால் கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானது என்று சொல்லலாம். அதனாலேயே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பல நன்மைகளை அப்ற்றி விவரிக்கிறார் மருத்துவர் மைதிலி.
இறால் கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானது என்று சொல்லலாம். அதனாலேயே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பல நன்மைகளை அப்ற்றி விவரிக்கிறார் மருத்துவர் மைதிலி.
இறாலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதிலுள்ள அயோடினின் காரணமாக, தைராய்டு சுரப்பு சீராக இருக்கும். இதனால் ஹைபர்தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு இரண்டுமே வராமல் தவிர்க்க முடியும்.
2/6
இறாலில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, கரோட்டினாய்டுகள் மற்றும் அஸ்டக்ஸாந்த் உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றன. இவை அனைத்துமே புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
3/6
புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவை. செலீனியம் மிகக் குறைந்த உணவுகளில் மட்டுமே இருக்கின்றன. அதில் இறாலும் ஒன்று. செலீனியம் அதிகம் உள்ள இறாலை எடுத்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தவிர்க்க முடியும்.
Advertisment
4/6
சருமத்தைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கச் செய்வதாலும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாலும் சருமத்துக்குத் தேவையான மாய்ஸ்ச்சர் கிடைப்பதோடு சுருக்கங்கள் மற்றும் நுண்ணிய கோடுகளை நீக்கி, சருமத்தை வயதான தோற்றம் ஆனாமல் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.
5/6
பொதுவாகவே கடல் உணவுகள் கண்ணுக்கு நல்லது. மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்பதை தாண்டி அதை கடல் உணவுகள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம்.
6/6
இறாலில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. அதேபோல இறாலில் கார்போ ஹைட்ரேட் முற்றிலும் இல்லாததால் கலோரிகளும் சீராக அளவில் தான் இருக்கின்றன. அதனால் எடை கூடாது. எடை குறைக்க உதவியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news