மரவள்ளிக்கிழங்கு யாருக்கெல்லாம் பிடிக்கும்... இதில் எவ்வளவு சத்துக்கள் தெரியுமா!
பொதுவாக கிழங்கு வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் நிறைய வகைகள் உண்டு. இப்போது மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்களை பற்றி இந்த தொகுப்பில் பின்வருமாறு பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்: கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து ஆகியவை சத்துக்கள் இருக்கின்றன.
2/5
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரத்த சோகையைக் கட்டுப்படுத்துகிறது.
3/5
எலும்பு மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
Advertisment
4/5
மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
5/5
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். மரவள்ளிக்கிழங்கை சரியான அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news