வெறும் வயிற்றில் வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்!
நமது அன்றாட உணவில் நட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வால்நட்ஸ் அவற்றின் நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் காரணமாக பிரபலமான தேர்வாக உள்ளது.
நமது அன்றாட உணவில் நட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வால்நட்ஸ் அவற்றின் நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் காரணமாக பிரபலமான தேர்வாக உள்ளது.
வால்நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் பாலிபினால்கள் ஏராளமாக உள்ளன. அவை நினைவாற்றல் உட்பட ஒட்டுமொத்த மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. மேலும், இதனை தினமும் சாப்பிடுவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும். இது தவிர வால்நட்ஸில் வைட்டமின் ஈ மற்றும் மெலடோனின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
2/5
வால்நட்ஸில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதில் உள்ள ஒமேகா -3 ஆனது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
3/5
வால்நட்ஸ் ஆனது ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளன. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். எனவே அவை பசி உணர்வை குறைத்து ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் ஆனது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன.
Advertisment
4/5
வால்நட்ஸ் ஆனது நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன. அவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை அளிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. வால்நட்ஸில் உள்ள நார்ச்சத்து ஆனது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுவதோடு, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது.
5/5
வால்நட்ஸ் ஆனது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. வால்நட்ஸ் இல் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ஆனது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news