/indian-express-tamil/media/media_files/2025/06/23/kitchen-hacks-2025-06-23-14-47-44.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/19/Lxm5p15RSrBZKmt8krvY.jpg)
பாகற்காய் கூட்டின் கசப்புத் தெரியாமல் இருக்க, சிறிது வெல்லம் சேர்க்கலாம். பொரியல் செய்யும்போது, பாகற்காயை மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசறி வறுத்தால் சுவையாக இருக்கும். வெங்காயம் மற்றும் கேரட்டை சம அளவில் சேர்த்துப் பொரியல் செய்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பர்.
/indian-express-tamil/media/media_files/gFW2QhTs4p2pLKCoq807.jpg)
ஒரே மாதிரியான வெண்டைக்காய் வதக்கல் அலுத்துப் போனதா? வெண்டைக்காயை நீளவாக்கில் கீறி, அதே போல் நறுக்கிய வெங்காயத்துடன் வதக்கி, சில துளிகள் எலுமிச்சை சாறு, சாம்பார் பொடி, தேங்காய் துருவல், மற்றும் குழையாத பருப்பு சேர்த்து வதக்கினால், சுவை பிரமாதமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/24/UlnL61tsT0iO9QptmSlI.jpg)
மைதா மாவு மற்றும் ரவையை சம அளவில் கலந்து, அதனுடன் மிளகு, சீரகத்தை பொடித்து சேர்த்து வைத்துக் கொண்டால், அவசர நேரங்களில் தண்ணீர் கலந்து உடனடியாக தோசை ஊற்றி சுவைக்கலாம். ராகி மாவையும் கோதுமை மாவையும் சம அளவில் கலந்து தோசை ஊற்றினால், கோதுமையின் வழவழப்புத் தன்மையும், கேழ்வரகின் வறட்டுத் தன்மையும் நீங்கி, சத்தான மற்றும் மிருதுவான தோசை கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/15/6a2hNYrIWvX6D62SlxzL.jpg)
சிவப்பு அவலை வறுத்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, வேர்க்கடலை மூன்றையும் எண்ணெயில் பொரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து வைத்துக் கொண்டால், சட்டென்று உப்புமா செய்து சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/screenshot-2025-04-25-151502-471942.png)
கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டால், தினமும் காலையில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இது சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும் சிறந்த வழியாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.