/indian-express-tamil/media/media_files/2025/04/21/7LEZvnmH7lxiaGyj34wG.jpg)
Hibiscus plant care tips in Tamil
/indian-express-tamil/media/media_files/2025/04/21/siW7RK8XKFkFcRuK6lCA.jpg)
செம்பருத்திச் செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதும், உதிர்வதும் சகஜமான ஒன்றுதான். ஆனால், இதைக் கவனித்து, சரியான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வது முக்கியம். உங்கள் செடியின் ஆரோக்கியத்துக்கு இது அவசியம். ஏன் இலைகள் மஞ்சளாகின்றன? சில காரணங்கள்
/indian-express-tamil/media/media_files/oC9Tog8Phwmw8vulsVL7.jpg)
செடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீர் ஊற்றுவது இரண்டுமே பிரச்னையை ஏற்படுத்தும். தீர்வு: தொட்டியின் மேல்மண் காய்ந்த பிறகு மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் தொட்டியின் அடியில் தேங்காமல் இருக்க வடிகால் வசதி அவசியம். தொட்டியின் அடிப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு துளைகள் இருந்தால் அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.
/indian-express-tamil/media/media_files/f0dtExfZK78DXFQZMXac.jpg)
நைட்ரஜன், இரும்புச்சத்து அல்லது மக்னீசியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும் இலைகள் மஞ்சள் நிறமாகலாம். தீர்வு: NPK 10-10-10 அல்லது 20-20-20 போன்ற உரங்களை சரியான அளவில் கலந்து போடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/3vRiG7kw2BS8buvoKKkA.jpg)
அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் செடிக்கு பாதிப்பை உண்டாக்கலாம். தீர்வு: செம்பருத்திச் செடியை 15-35°C வெப்பநிலையில் வைப்பது நல்லது.
/indian-express-tamil/media/media_files/DA2U1iAzOCHflv5lJOmz.jpg)
வெள்ளை ஈக்கள், சிலந்திப் பூச்சிகள் (ஸ்பைடர்), அஃபிட் போன்ற பூச்சிகள் செடியின் இலைகள் மற்றும் தண்டுகளில் இருந்து சாற்றை உறிஞ்சும். தீர்வு: செடியை அடிக்கடி கவனியுங்கள். பூச்சிகள் இருந்தால் வேப்பெண்ணெய் அல்லது இயற்கை பூச்சி மருந்து தெளித்து கட்டுப்படுத்துங்கள்.
/indian-express-tamil/media/media_files/XYBMkrVbKqvjXNpXdgon.jpg)
அதிகப்படியான அல்லது குறைவான சூரிய ஒளியும் செடிக்கு நல்லதல்ல. தீர்வு: ஒரு நாளைக்கு 4-6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் செடியை வையுங்கள். இப்படி சரியான முறையில் கவனித்துக்கொண்டால், உங்கள் செம்பருத்திச் செடி அழகாக பூத்துக் குலுங்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.