/indian-express-tamil/media/media_files/9MadKoDmAjjx00B5V9mA.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/15/istockphoto-1359534428-612x612-2025-07-15-15-39-42.jpg)
பெரும்பாலான மக்கள் முந்திரி பருப்பை விரும்பி சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கும் பிடித்தமான உலர் பருப்பாக முந்திரி இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/istockphoto-1213019283-612x612-2025-07-15-15-39-15.jpg)
இனிப்புகள், பாயாசம், அல்வா, புலாவ், பிரியாணி என பல உணவுப் பொருட்களில் முந்திரி பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதிகமாக பயன்படுத்தக்கூடிய முந்திரி எவ்வளவு ஆரோக்கியமானது என்றும் எத்தனை முந்திரிகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோமா.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/istockphoto-1363583741-640x640-2025-07-15-15-39-15.jpg)
நிச்சயமாக, முந்திரி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் அதிகமாக முந்திரியை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ரிபோஃப்ளேவின், தாமிரம், வைட்டமின்கள், துத்தநாகம், நார்ச்சத்து போன்றவையும் இதில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
/indian-express-tamil/media/media_files/9vcm0zxlMivN9SIeVqlZ.jpg)
ஒரு நாளைக்கு 5-10 முந்திரி மட்டுமே சாப்பிட வேண்டும். புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெற முந்திரியை உட்கொள்ள விரும்பினால், தினமும் 15-30 முந்திரி சாப்பிடலாம். ஆனால், உடல் எடை கூடும் என்று நீங்கள் நினைத்தால், உணவு நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே முந்திரியை உட்கொள்வது நல்லது.
/indian-express-tamil/media/media_files/6Vlce98J10AmEPwzfkX2.jpg)
ஒரு நாளைக்கு 5-10 முந்திரி மட்டுமே சாப்பிட வேண்டும். புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெற முந்திரியை உட்கொள்ள விரும்பினால், தினமும் 15-30 முந்திரி சாப்பிடலாம். ஆனால், உடல் எடை கூடும் என்று நீங்கள் நினைத்தால், உணவு நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே முந்திரியை உட்கொள்வது நல்லது.
/indian-express-tamil/media/media_files/9MadKoDmAjjx00B5V9mA.jpg)
சிலர் ஒரு நாளைக்கு 30 முதல் 40 முந்திரி சாப்பிடுவார்கள். நீங்களாக ஆசைப்பட்டு அவ்வாறு 30-40 முந்திரிகளை சாப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு கேடு. நீங்கள் விளையாட்டு வீரர், தடகள வீரர், பாடி பில்டர் என்றால் 30-40 முந்திரி சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/aFimNWPNPAo7FCWEzwnp.jpg)
இவர்களின் உடல் மெட்டபாலிசம் அதிகமாக இருப்பதால், அவர்கள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
/indian-express-tamil/media/media_files/jECCIsKyykG0LW61fRgr.jpg)
முந்திரியை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும், ஏனெனில் அவற்றில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். இதனால் ஒவ்வாமை, வயிற்று வலி, வாந்தி, வீக்கம் போன்றவையும் ஏற்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.