/indian-express-tamil/media/media_files/2025/03/07/mtna1LlgYv9sk1eDmnBi.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/07/Zgp3i2ZqEWjwo4tp58pA.jpg)
ஒரு சிகரெட் பிடிப்பதால் ஆயுள் எவ்வளவு குறையும் என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா? ஆராய்ச்சியாளர்களின் தகவல் படி, விரைவில் புகை பிடிப்பதை விட்டு விடுவதால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/ysMMOEgQNeNfkfg3yERo.jpg)
புகை பிடிப்பதால் இதய நோய், பக்கவாதம், ஆஸ்துமா, புற்றுநோய், நேரடிப்பு நோய், நுரையீரல் தொற்றுகள், இறப்பை புண்கள், எலும்புகள் பலவீனமடைதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படலாம். புகைபிடித்தல் உடலுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பல்வேறு நுரையீரல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/u1QvlnAsWWMrCuXwNT24.jpg)
பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் புகைத்தால் உங்கள் ஆயுட்காலம் சராசரியாக 20 நிமிடங்கள் வரை குறையலாம் என்று கூறுகிறது. ஆண்களுக்கு 17 நிமிடங்கள் வரையிலும், பெண்களுக்கு 22 நிமிடங்கள் வரையிலும் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது. ஒரு பாக்கெட் சிகரட்டை முழுவதுமாக புகைப்பதால் ஏழு மணி நேரங்களை இழக்க நேரிடும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/uOBkGbdGuCyohayItbur.jpg)
புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தி விட முடியாது, அதனை படிப்படியாக குறைக்கலாம். முதலில் உங்கள் வாகனம், கார், அலுவலகம், வீட்டில் சிகரெட்களை வைத்திருக்க வேண்டாம். உங்களது முடிவு பற்றி உங்களது நண்பர்களிடம் கூறுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/L2S2CDfzFZcWPUHjRNAc.jpg)
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இசையை கேளுங்கள், நடந்து செல்லுங்கள், படம் பாருங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்யுங்கள். தேவைப்பட்டால் தேநீர் அல்லது காபியை குடியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.