/indian-express-tamil/media/media_files/2025/05/12/qMxd6wqmex1X4Qnh9Vax.jpg)
/indian-express-tamil/media/media_files/WVj3ZYWC5gwe3wq6sLAh.jpg)
இது இயற்கையாகவே ஒரு நல்ல வலி நிவாரணி ஆகும். இது அழற்சியை உடனே சரிசெய்து மூட்டில் இருக்கும் அசெளகரியத்தை குணப்படுத்தும். இதில் உள்ள அழற்சியை சரிசெய்யும் திறனால் உடலில் இரத்த ஓட்டத்தையும் இது மேம்படுத்தும். இதை தினமும் வைத்து மசாஜ் செய்து வந்தால் மூட்டு கீல்வாத வலிகளை குணப்படுத்தும்.
/indian-express-tamil/media/media_files/XFLSLiCahJ8LlwGlXtBt.jpg)
கடுகு எண்ணெயில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன. இது சரும ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் பிற நிலைமைகள் உட்பட பல்வேறு தோல் நோய்களுக்கு சிகிச்சயளிக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/36sED8MfmNvYXmJtBh4U.jpg)
கடுகு எண்ணெய் சக்தி வாய்ந்த ஊக்கி. இது இயற்கையான தூண்டுதல் திறன் உடையது ஆகும். தூண்டுதல் என்பது நரம்பு மற்றும் உடலியல் மண்டல செயல்பாடின் எனர்ஜியை ஊக்குவிக்கும் நிலை ஆகும். கடுகு எண்ணெயை உட்கொண்டால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் உள்ள பித்தம் மற்றும் செரிமான சாற்றை வெளியேற்றி செரிமான மண்டலத்தை மேம்படுத்தி நமக்கு சத்துகளை கொடுக்கிறது. கடுகு எண்ணெய் சுத்தமானதா எனக் கண்டறிய நாம் நம் வீட்டிலேயே சில பரிசோதனைகளை செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/hSUFzoGurPUfPpWXbVW7.jpg)
ஃபிரீஸ் டெஸ்ட்
ஒரு பாட்டிலில் கடுகு எண்ணெய் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால், அதில் பாம் ஆயில் சேர்க்கப்பட்டிருந்தால், பாட்டிலின் அடியில் பாம் ஆயில் உறைந்து தங்கியிருப்பதைக் காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/12/7LPvdRsS5kVCpcOGbGTQ.jpg)
வாசனை டெஸ்ட்
கடுகு எண்ணெயை நேரடியாக மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்தால் ஒரு கடுமையான, கூர்மையான, விரும்பத்தகாத வாசனை வரும். அதில் கலப்படம் செய்யப் பட்டிருந்தால், ஒரு லேசான செயற்கைத் தன்மை கொண்ட வாசனை வரும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/12/tTFiKg3XsYMNkVoKHKdg.jpg)
பிளாட்டிங் பேப்பர் டெஸ்ட்
ஒரு சிறு துண்டு பிளாட்டிங் பேப்பரில் ஒரு துளி கடுகு எண்ணெய் விட்டு பதினைந்து நிமிடம் அப்படியே விடவும். பிறகு பார்க்கும் போது பேப்பரில் லேசான எண்ணெய்க் கறை சமமாகப் பரவியிருந்தால் அது சுத்தமானது. கலப்படமானதாயிருந்தால், கறை அடர் நிறத்தில் பிசு பிசுப்புடன் சமநிலையின்றிப் பரவியிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.