/indian-express-tamil/media/media_files/2024/11/09/TLyWX99M6BPNap7FvVek.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/09/HBla9qIZkRQCaEoT6w10.png)
முதலில் ரேஷன் புழுங்கல் அரிசியை எடுத்துக்கொள்ளவும். தலை தட்டாமல் 10 கப் எடுத்துக்கொள்ளவும். அடுத்ததாக ரேஷனில் வாங்கின பச்சரிசியை எடுத்து கொண்டு தலை தட்டாமல் 2 கப் எடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/5FhL8bEKEdhTSNQuHwJu.jpg)
இப்போது இரண்டு அரிசியையும் ஒன்றாக ஒன்றாக கலந்து ஒரு முறை தண்ணீரில் கழுவி எடுக்கவும். பின்பு கொஞ்சம் கல் உப்பு (அளவு தேவை இல்லை) போடு நன்கு பிசையவும். மறுபடியும் 4 முதல் 5 முறை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும். இந்த கட்டத்தில் அரிசியில் உள்ள அசுத்தம் எல்லாம் நீங்கி விடும்.
/indian-express-tamil/media/media_files/sXRxHd0N1kwJkRegefHg.jpg)
இப்போது இதை ஒரு ஓரமாக தண்ணீரோடு வைத்து விட்டு உளுந்தை தயார் செய்ய வேண்டும். அதே கப்பில் தலை தட்டாமல் 1 கப் எடுத்து கொள்ளவும். பின்பு வெந்தயம் ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும். உளுந்தை அரிசியை தழுவியது போல கழுவ வேண்டாம்.
/indian-express-tamil/media/media_files/3v2nmjDqlcyZFeMKLDDK.jpg)
அரசியும் வெந்தயமும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கலாம். அனால் உளுந்தை சற்று நேரம் ஊறிய பின்பு பிரிட்ஜில் எடுத்து வைத்து விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/XzANuNTCB7en80OfyI2z.jpg)
பின்பு காலையில் எல்லாம் ஊறிய பின்பு முதலில் வெந்தயம் போடு அரைக்கவும், அப்புறம் உளுந்தை தண்ணீர் இல்லாமல் உள்ளே போடு அரைத்து எடுக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Idly.jpg)
அது முடிந்த பின் அரிசியை போடு அரைக்கவும். அது லேசான கொரகொரப்பு பக்குவத்தில் இருக்கும் போது எடுத்து விடவும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/idly.jpg)
பின்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு போடு தேவையான அளவு கரைத்து வைத்து கொள்ளவும். பொங்கி வரும் வரை காத்திருந்து பிறகு இட்லி ஊற்றினால் உங்களுக்கான பஞ்சு போன்ற இட்லி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.