இடுக்கி மாவட்டம் கல்யாணத்தண்டு மலை முழுவதும் ஸ்ட்ரோபிலாந்தெஸ் செசிலிஸ் வகையைச் சேர்ந்த அரிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி முழுவதும் நீல நிற கம்பளம் விரித்தது போல் அழகாக காட்சியளிக்கிறது.
2/6
மேட்டுக்குறிஞ்சி என்றழைக்கப்படும் இந்த அரிய பூக்கும் நிகழ்வு உள்ளூர் மக்களையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
3/6
கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1000 மீட்டர் உயரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி போலல்லாமல், மேட்டுக்குறிஞ்சி ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.
Advertisment
4/6
பருந்தும்பரா மலைகளிலும் மேட்டுக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
5/6
மேட்டுக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளதையடுத்து, கல்யாணத்தண்டு மலை மற்றும் பருந்தும்பாறைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
6/6
இடுக்கி அணை நீர்த்தேக்கத்தின் காட்சியும், கல்யாணத்தண்டுவில் பூக்கும் நீலக்குறிஞ்சியும் கட்டப்பனாவில் உள்ள நிர்மலா நகருக்கு அருகில் உள்ள பகுதிக்கு பல பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக சுற்றுலாத்துறை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.