காங்கோ
கிட்டதட்ட 80 ஆண்டுகளாக பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து காங்கோ, 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் விடுதலை பெற்றது.
லீச்டென்ஸ்டீன்
இந்த நாட்டை பொறுத்தவரை இங்கு சுதந்திர தினம் இல்லை என்றாலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடுகிறது.
பஹ்ரைன்
1931 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கும் பஹ்ரைன் ஆட்சியாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின், பிரிட்டன் பஹ்ரைனை ஆட்சி செய்து வந்தது. பின்னர் 1971 ஆம் ஆண்டு முறைப்படி பிரிட்டன் பஹ்ரைனுக்கு விடுதலை அடைந்தது.
ஜப்பான்
ஜப்பான் பொறுத்தவரை ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் வரலாற்றில் முக்கியமான நாள் ஆகும். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் பேரரசர் இரண்டாம் உலகப்போரில் தாங்கள் சரணடைவதாக அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. எனவே இந்த நாளை ஜப்பான் மக்கள் End of the War Memorial Day என்ற பெயரில் அனுசரிக்கின்றனர்.
தென்கொரியா
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பானின் ஆட்சியில் இருந்து கொரியா பிராந்தியம் விடுதலை பெற்றது. இந்த நாளை தென்கொரியா மக்கள் 'Restoration of Light Day,' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
வடகொரியா
தென்கொரியாவை போல வடகொரியாவுக்கும் ஆகஸ்ட் 15 தான் விடுதலை நாள். ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து கொரிய பிராந்தியம் விடுவிக்கப்பட்ட நாளை தான் வடகொரியாவும் கொண்டாடுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.