இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் சென்னையில் இருக்கும் சத்யபாமா பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர் பும்ரா. அவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 159 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. இதேபோல், 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் பும்ரா, அந்த அணிக்காக 133 போட்டிகளில் இருந்து 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, மற்றும் 2020 ஆகிய 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. அப்போது கேப்டனாக ரோகித் சர்மா இருந்த நிலையில், 5 பட்டங்களின் வெற்றி போதும் பும்ரா முக்கிய பங்காற்றினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் பும்ரா ஆடி வருகிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் செயலாற்றி வருகிறார்.
பும்ரா கடந்த 15 மார்ச் 2021 அன்று, கோவாவில் மாடலும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை காதலித்து மணந்தார். இந்த தம்பதிக்கு அங்கத் என்கிற மகன் இருக்கிறார்.
உலகின் டாப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, ஜனவரி 2024 நிலவரப்படி 7 மில்லியன் அமெரிக்கன் டாலர் (ரூ. 55 கோடி) நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சென்னையில் ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்வின் போது பும்ராவுக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களுடன் செல்பீ எடுத்து மகிழ்ந்த இந்திய வீரர் பும்ரா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.