/indian-express-tamil/media/media_files/2025/07/04/kajal-aggarwal-childhood-photos-goes-viral-tamil-news-2025-07-04-20-42-23.jpg)
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.
மும்பையில் கடந்த 19 ஜூன் 1985 ஆண்டில் பிறந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது.
தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான சிக்கந்தர், கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். கண்ணப்பா படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காஜல் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
நடிப்பு இடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் காஜல் அகர்வால். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். இந்த சூழலில், நடிகை காஜல் அகர்வாலின் குழந்தைப் பருவ புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.