New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/17/kajal-and-nisha-1-2025-07-17-13-11-59.jpg)
சினிமாக்களில் நடித்த அக்கா, தங்கைகள் நிஜத்தில் இவ்வளவு பிரியமானவர்களா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் சகோதரிகளை பற்றி பார்ப்போம்.
காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் இருவரும் இந்தியத் திரைப்பட நடிகைகள் மற்றும் சகோதரிகள் ஆவர். காஜல் அகர்வால், 2004 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான "கியூன்! ஹோ கயா நா" மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் மாவீரன் போன்ற படங்கள் இவரை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தின. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். விஜய், கார்த்தி, விஷால், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் இளைய சகோதரி. இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படமான யேமைந்தி ஈ வேலா மூலம் நடிகையாக அறிமுகமானார்.தமிழில் இஷ்டம் என்ற படத்தில் விமலுடன் நடித்தார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்த பிறகு சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி தற்போது டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்/சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராகவும் இருக்கிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் பலமுறை ஒன்றாக பொது நிகழ்வுகளிலும், விடுமுறை நாட்களிலும் காணப்பட்டுள்ளனர். இருவருக்கு திருமணமான நிலையில் படங்களில் நடிப்பது குறைந்தாலும் தங்களது குடும்பங்களை கவனித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.