/indian-express-tamil/media/media_files/2025/06/01/Ka0U32FTjn92f6FvTq2L.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/12/y8Ec2UTvfjrUbpRaPozd.jpg)
யோகா செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உடலைக் கஷ்டத்திற்கு ஆளாக்காமல் அவற்றிற்குரிய விதிமுறைகளை நன்கு அறிந்து ஓர் ஆசான் உதவியுடன் ஆசனங்களை செய்ய முயலவேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/lnXKzsS8D2GjkWvoRH9U.jpg)
யோகாசனம் செய்பவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் காலைக் கடன்களை முடித்து விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/vRZWWEAIB4FTrnQdpVVQ.jpg)
யோகாசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியாமல் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/HnuapYDjoMWZ7HPvt5Nx.jpg)
கஷ்டம் ஏற்படுத்தாத எளிய முறையிலேயே பயிற்சிகள் இருக்க வேண்டும். உடலுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் பயிற்சியில் வலுக்கட்டாயமாக ஈடுபடக்கூடாது. களைப்பு ஏற்படும் போது இடை இடையே சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/f4o5xttqOCuIhcCHhxkA.jpg)
யோகாப் பயிற்சிகளை எப்போதும் வெறும் வயிற்றில் இருக்கும் போதே செய்ய வேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு செய்யக் கூடாது. சாப்பிட்ட பிறகு 4 மணி நேரத்திற்கு பிறகும், லேசான சாப்பாடு என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகா செய்த பிறகு சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/1HDUu3ONMmAvv5SvBQCZ.jpg)
உடல் நலம் இல்லாதபோது யோகா பயிற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். மீண்டும் உடல் நலம் பெற்ற பிறகு யோகா தொடங்கும் போது முதலில் மூச்சுப்பயிற்சி மட்டுமே ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டும். பிறகு சிறுகச்சிறுக மற்ற பயிற்சிகளைத் தொடரலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/21/EAiYPz7Y3XQ4Bp4D3Wlc.jpg)
யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் சமயத்தில் முதல் மூன்று நாட்களுக்கு பயிற்சியை கைவிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஆறு மாதங்கள் கர்ப்பத்திற்கு பிறகு பயிற்சியில் ஈடுபட கூடாது. வழக்கமாக யோகாப் பயிற்சிகளை மேற்கொள்ளாத பெண்கள் மூன்று மாதக் கர்ப்பத்திற்கு பிறகு பயிற்சிகளை நிறுத்திக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/OHh55PCn9yKheu1BssVm.jpg)
யோகசானப் பயிற்சி செய்கிற இடம் அமைதியாகவும் காற்றோட்டமும் சூரிய ஒளியும் தாராளமாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். ஆசனங்கள் செய்ய பாய், ஜமுக்காளம், போர்வை போன்றவற்றை விரிப்புகளாகப் பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/4t6xUNSa11kv4PBC1Yd0.jpg)
யோகா பயிற்சிகளை கூடிய வரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திலேயே தினமும் தவறாது செய்வது நல்லது. பயிற்சிக்கு அரைமணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ குளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.