/indian-express-tamil/media/media_files/1AbqXdg9xJty5VXy1Bql.jpg)
Kitchen Tips
/indian-express-tamil/media/media_files/4q0a4Prdd4GLpWknpIX0.jpg)
உங்க வீடு, கிச்சன் சுத்தம் செய்றதுலயே பாதி நாள் போயிடுதா? இனி எந்த சிரமமும் இல்லாம உங்க வீடு, கிச்சனை சுத்தமாக வச்சுக்கலாம். எப்படினு பாருங்க.
/indian-express-tamil/media/media_files/2024/12/17/5ycJ16V2bkCgPHzRRQNk.jpg)
உங்க பழைய கேஸ் அடுப்பை புதுசா மாத்தலாம்
இனி வாழைப்பழம் சாப்பிட்டு அந்த தோலை குப்பையில தூக்கி போடாதீங்க. உங்க கேஸ் அடுப்புல இருக்கிற விடாப்பிடியான கறை, அழுக்கு, எண்ணெய் நீங்க வாழைப்பழத் தோலை நல்ல அடுப்பு மேல தேய்ச்சு விடுங்க. பிறகு ஒரு ஈரத்துணிய வச்சு துடைச்சு எடுத்தா உங்க கேஸ் அடுப்பு பளபளன்னு மின்னும்.
/indian-express-tamil/media/media_files/KYBe0wqCqgTTdyzbjYKP.jpg)
பொறியல் சமைக்கும் போது எண்ணெய் அதிகமாகிடுச்சா
சமைக்கும் போது பொறியல், வறுவல் செய்யும்போது சில நேரங்களில் எண்ணெய் அதிகமாகிடும். ஆனா இனி சிம்பிளா இந்த எண்ணெய்ய குறைக்கலாம். கடாய்ல காய்கறி எல்லாம் ஓரமா தள்ளிவிட்டு நடுவுல ஒரு சின்ன கிண்ணத்தை வாய்ப்பகுதி அடியில இருக்கிற மாதிரி வைங்க. இப்போ ஓரத்துல இருக்கிற காய்கறிய எடுத்துருங்க. இப்படி செய்யும்போது காய்கறியில இருக்கிற எண்ணெய் எல்லாம் கிண்ணத்துக்குள் வந்துவிடும். காய்கறியில எண்ணெய் இருக்காது.
/indian-express-tamil/media/media_files/7an0AkXUopDP1DmIAZYE.jpg)
ரொம்ப சீக்கிரமா முட்டைக்கோஸ் வெட்டுறது எப்படி?
முட்டைக்கோஸ் வெட்டுறதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும். ஆனா இனி ஒரு செகண்ட்ல சட்டுன்னு வேலைய முடிக்கலாம். முட்டைக்கோஸ் எடுத்து 4 துண்டா வெட்டி, சின்ன சின்னதா கட் பண்ணி வச்சுக்கோங்க. இப்போ இந்த முட்டைக் கோஸ மிக்சி ஜார்ல போட்டு, பல்ஸ் மூட்-ல அரைச்சா முட்டைக்கோஸ் நல்லா பூ மாதிரி வந்துடும். மிக்சி ஜார்ல போடும் போது மொத்தமா போடாம, கொஞ்சம் கொஞ்சமா போட்டு அரைச்சு எடுத்துக்கோங்க. இனி இது பொறியல் பண்ண யூஸ் பண்ணலாம்.
/indian-express-tamil/media/media_files/SqwxVitpWKZTNCFEP1bO.jpg)
கைவலிக்காம ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணுறது எப்படி?
ஒரு கிண்ணத்துல ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, தண்ணீர், பாத்திரம் கழுவும் லிக்குவட் ஒரு டிராப் சேர்த்து நல்ல கலக்குங்க. இதை ஒரு ஸ்பிரே பாட்டில்ல ஊத்தி வச்சுக்கோங்க. இப்போ உங்க ஃபிரிட்ஜ் அணைச்சுட்டு, உள்ள இருக்கிற பொருட்கள் எல்லாம் வெளியே எடுத்து வைங்க. இப்போ நீங்க ரெடி பண்ண லிக்குவட் எடுத்து பிரிட்ஜ் உள்ள, டோர், டோர் பக்கத்துல இருக்கிற கேஸ்கட் எல்லாப் பக்கமும் ஸ்பிரே பண்ணி ஒரு துணிய வச்சு துடைச்சுட்டு, அப்புறம் ஈரத்துணிய வச்சு துடைங்க. இப்படி பண்ணா கைவலிக்காமலே உங்க ஃபிரிட்ஜ் ஈஸியா கிளீன் பண்ணிரலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us