/indian-express-tamil/media/media_files/2025/05/10/Vl2ATHTkqm40QkKfaz3B.jpg)
Home cleaning Tips
/indian-express-tamil/media/media_files/2025/05/10/HnD2YQ6Yj87o1egvEaFF.jpg)
உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தொல்லை கொடுக்கும் எலி, பெருச்சாளி, பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்ட நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமான வழிகளைப் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல், உங்கள் வீட்டிற்குப் பாம்பு வந்துவிட்டால் பயப்படாமல் இந்த ஸ்ப்ரேயை அடித்தால் போதும், அந்தப் பாம்பு உடனே இறந்துவிடும். அந்த அளவிற்குப் பவர்ஃபுல்லான ஒரு சூப்பர் ரெமெடி.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/vEe9rZ7Xz0xFXG1dNgV7.jpg)
பல்லி, கரப்பான் பூச்சி மற்றும் பிற பூச்சிகளை விரட்ட
இதற்கு தேவையான பொருட்கள்: கிராம்பு - குறிப்பிட்ட அளவு தூள் உப்பு - சிறிதளவு விக்ஸ் - சிறிதளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் குறிப்பிட்ட அளவு கிராம்பை எடுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்க வேண்டாம். அல்லது ஒரு கல்லின் உதவியுடன் தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இடித்து வைத்துள்ள கிராம்பை அதனுடன் சேர்க்கவும். இந்த கரைசலை அடுப்பில் வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க விடவும். அப்போதுதான் கிராம்பின் சாறு முழுமையாக நீரில் இறங்கும். பிறகு சிறிதளவு தூள் உப்பைச் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். கரைசல் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கரைசலை இளம் சூடாக ஆற விடவும். இளம் சூடாக இருக்கும்போதே சிறிதளவு விக்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும். விக்ஸ் எளிதாக கரைந்துவிடும். இந்த கரைசலை இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் பார்த்தால் நன்றாக செட் ஆகியிருக்கும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். நான் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துள்ளேன். இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், ஜூஸ் பாட்டிலில் துளைகள் போட்டு பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை: இந்த கரைசலை கிச்சன் கவுண்டர் டாப், அடுப்பு மற்றும் பூச்சிகள் வரும் என்று நீங்கள் நினைக்கும் இடங்களில் இரவு படுப்பதற்கு முன்பு ஸ்ப்ரே செய்துவிட்டு துடைத்து விடவும். கிராம்பு மற்றும் விக்ஸின் வாசனையால் பல்லி, கரப்பான் பூச்சி, ஓலைப் பூச்சி மற்றும் சிலந்தி போன்ற எந்த வகையான பூச்சிகளும் உங்கள் கிச்சனுக்கு வராது. இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/BGPdkuikRdBakPRWjVHl.jpg)
எலியை விரட்ட
இதற்கு தேவையான பொருட்கள்: பழைய பிளாஸ்டிக் பாக்ஸ் - ஒன்று துணி துவைக்கும் சோப்பு தூள் (டிடர்ஜென்ட் பவுடர்) - சிறிதளவு கோல்கேட் பேஸ்ட் - சிறிதளவு சிந்தெடிக் வினிகர் - ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு (அல்லது மைதா மாவு) - தேவையான அளவு விக்ஸ் - சிறிதளவு பிஸ்கட் தூள் (விரும்பினால்) பேப்பர் கப் அல்லது தேங்காய் சிரட்டை - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ஒரு பழைய பிளாஸ்டிக் பாக்ஸில் சிறிதளவு சோப்பு தூளைப் போடவும். அதனுடன் சிறிதளவு கோல்கேட் பேஸ்ட்டை சேர்க்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் சிந்தெடிக் வினிகரை ஊற்றவும். நுரை பொங்கி வரும். ஒரு ஸ்பூனை வைத்து பேஸ்ட் மற்றும் வினிகரை நன்றாக கலக்கவும். கோதுமை மாவையோ அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் மாவையோ சேர்த்து நன்றாக கலந்து, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். நான் ஐந்து உருண்டைகள் பிடித்துள்ளேன். உருண்டைகளை தட்டையாக்கி, நடுவில் சிறிதளவு விக்ஸை வைத்து நன்றாக மூடி உருண்டைகளாக ஆக்கிக் கொள்ளவும். ஒரு பேப்பர் கப் அல்லது தேங்காய் சிரட்டையில் இரண்டு இரண்டு உருண்டைகளை வைக்கவும். விருப்பப்பட்டால், உருண்டைகள் மேல் பிஸ்கட் தூளை தூவி விடலாம். பயன்படுத்தும் முறை: இந்த உருண்டைகளை எலிகள் வரும் இடங்களில் வைக்கவும். இதை சாப்பிடும்போது எலிகளுக்கு வயிற்று உபாதை ஏற்படும். எலிகளுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், இதை சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை அவை திரும்பி பார்க்காது.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/7m7I3xt5VXANPtzPEkJa.jpg)
பாம்பை விரட்ட
இதற்கு தேவையான பொருட்கள்: பழைய பிளாஸ்டிக் பாக்ஸ் - ஒன்று பெருங்காயம் - சிறிதளவு பூண்டு - 4 பல் தண்ணீர் - ஒரு டம்ளர் செய்முறை: ஒரு பழைய பிளாஸ்டிக் பாக்ஸை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்க்கவும். நான்கு பல் பூண்டை எடுத்து இடித்துக் கொள்ளவும். இடித்த பூண்டை பெருங்காயத்துடன் சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். பெருங்காயம் மற்றும் பூண்டின் சாறு தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். பயன்படுத்தும் முறை: இந்த பெருங்காயத் தூளின் வாசனைக்கு பாம்புகள் வரவே வராது. பாம்பு தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களில், வீடு முழுவதும் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த கரைசலை ஸ்ப்ரே செய்யவும். இது மிகவும் எபெக்டிவ்வான டிப்ஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.