/indian-express-tamil/media/media_files/2025/03/07/KWPkjKbQsrEEV7NDlYHL.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165342-2025-09-02-16-54-56.png)
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல, ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165348-2025-09-02-16-54-56.png)
வனத்துறை சார்ந்த சுற்றுலா இடங்கள் தொடங்கும் தூண் பாறை பகுதியில் பயணிகளிடமிருந்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே இடத்தில் டிக்கெட் பெறும் வசதி ஏற்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு இது எளிதாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165354-2025-09-02-16-54-56.png)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த, பனிமூட்டம் மற்றும் அடர்ந்த வனங்களால் சூழப்பட்ட பிரபலமான சுற்றுலா இடமாகும். ஏரி, நீர்வீழ்ச்சி, புல்வெளிகளில் நடைபயணம், மிதிவண்டி, குதிரசவாரி ஆகியவை முக்கிய அம்சங்களாகும். தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் போன்ற சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165401-2025-09-02-16-54-56.png)
இந்த சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் நுழைவு கட்டணம் அந்தந்த சுற்றுலா தலங்களில் நபர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வந்தது
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165406-2025-09-02-16-54-57.png)
இன்று முதல் கொடைக்கானலில் ஒரே முறை நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது. வாகனத்திற்கு ரூ.50 கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் சுற்றுலா நுழைவுப்பகுதியில் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-165414-2025-09-02-16-54-57.png)
உள்நாட்டு வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்: கார்/வேன் ரூ.50, பைக் ரூ.20. வெளிநாட்டு வாகனங்களுக்கு: கார்/வேன் ரூ.500, பைக் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.