/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191118-2025-08-29-19-12-31.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191125-2025-08-29-19-12-50.png)
கொங்கு மண்டலத்தின் ஃபேவரிட் உணவு, அரிசி பருப்பு சாதம். குறிப்பாகத் திருப்பூர், கோவை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசிம் பருப்பு சாதம் வெகு பிரபலம். வீடுகளில் வாரம் ஒருமுறையாவது இந்த உணவைச் சமைத்துவிடுவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191131-2025-08-29-19-12-50.png)
இந்த உணவை கொங்கு நாட்டுப் பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். காலை, மதியம், இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற ருசியான உணவு வகை இது. தட்டைப் பயிறு, அவரைப்பயிறு, கொள்ளு என தங்களுக்குப் பிடித்த பயிறு வகைகளைக் கொண்டும் அரிசிம் பருப்பு சாதம் தயாரிக்கலாம். தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புளிச் சட்னி அல்லது ஊறுகாய் நல்ல சாய்ஸ். இந்த அரிசி பருப்பு சாதம் செய்முறையை இங்கு காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191141-2025-08-29-19-12-50.png)
தேவையான பொருட்கள்
அரிசி - 1 டம்ளர், துவரம் பருப்பு - கால் டம்ளர், வெங்காயம் - 1, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, பூண்டு - 3 பல், தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன், கடுகு- 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191148-2025-08-29-19-12-50.png)
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பருப்பை நன்றாக கழுவி ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191156-2025-08-29-19-12-50.png)
வெங்காயம், தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191204-2025-08-29-19-12-50.png)
தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/29/screenshot-2025-08-29-191211-2025-08-29-19-12-50.png)
சூப்பரான அரிசி பருப்பு சாதம் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.